அமைப்பின் பெயர் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆகும்.
அமைப்பின் துவக்க நாள்: 16-05-2004
அமைப்பின் கொள்கைள்:
1. இறைவேதம் திருக்குர்ஆனையும் இறுதித்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் வழிமுறையான சுன்னத்தையும் தனது வாழ்வில் வழி காட்டியாகவும் ஜீவ நாடியாகவும் ஏற்று செயல் படுவதுதன் மூலமே ஒருவன் ஈடேற்றம் பெற முடியும்.
2. மனிதக்குலம் உயர்வதற்கு திருக்குர்ஆனும் நபி(ஸல்) அவர்கள் சுன்னத்தும் மாத்திரமே போதும் அவற்றுடன் வேறெதுவும் தேவையில்லை.
3. எந்தக் கருத்தாவது திருக்குர்ஆனின் ஏதேனுமொரு வசனத்திற்கோஇ நம்பத்தகுந்த ஏதேனுமொரு நபி மொழிக்கோ முரணாக இருந்தால் அது எவரது கூற்றாக இருந்தாலும் புறக்கணிக்கப்படும்.
4. உள்ளாட்சி சட்டமன்றம்இ நாடாளுமன்றம் ஆகிய எந்த தேர்தலிலும் போட்டியிடுவதில்லை. சூழ்நிலைக்கு ஏற்றவாறு தேர்தலின் எந்த கட்சிக்கு வாக்களிப்பது என்பதைப் பற்றி மட்டும் கருத்து கூறப்படும்
அமைப்பின் நோக்கங்கள்:
1. இவ்வமைப்பின் கொள்கைகளை தானும் ஏற்று பின்பற்றுவதுடன் அவ்வாறு பின்பற்றத் தூண்டுவது.
2. அமைப்பின் கொள்கைகளை விளங்கி மக்களிடம் பிரச்சாரம் செய்தல் அதன்பால் அழைத்தல்.
3. மக்கள் அனைவரும் கல்விஇ பொருளாதாரம்இ மருத்துவம்இ சுகாதாரம்இ தொழில்இ தொழில் நுட்பம்இ கலாச்சாரம்இ பண்பாடுஇ சமூக நலம் உள்ளிட்ட எல்லாதுறைகளிலும் மேம்பாடு அடையப்பாடுபடுதல்.
அமைப்பின் செயல் திட்டங்கள்:
1. கல்வி நிறுவனங்கள் ஏற்ப்படுத்துதல்.
2. பத்திரிக்கைகள்இ மலர்கள்இ நுற்கள்இ பிரசுரங்கள்இ ஒளி-ஒலி நாடாக்கள்இ குறுந்தட்டுகள் வெளியிடுதல்.
3. தொலைக்காட்சிஇ வானொலியில் நிகழ்ச்சிகளை வழங்குதல்.
4. தெரு முனை பிரச்சாரங்கள்இ சந்திப்புகள்இ கலந்துரையாடல்இ கூட்டங்கள்இ மாநாடுகள்இ கருத்தரங்குகள் நடத்துதல்.
5. நோக்கங்கள் நிறைவேற நவீன விஞ்ஞானத்தையும்இ விஞ்ஞான முறைகளையும்இ சாதனங்களையும் தகவல் தொடர்பு சாதனங்களையும்இ கம்ப்யூட்டர்இ இன்டர்நெட் உள்ளிட்ட அனைத்தையும் பயன்படுத்துதல்.
6. அதற்காக சொத்துக்கள் வாங்கி பராமரித்தல்.
7. நிதிக்காக உண்டியல்இ சந்தாஇ நன்கொடை மூலம் பொருள் திரட்டுதல்.
8. நோக்கங்கள் நிறைவேறவும்இ செயல்திட்டங்களை செயல்படுத்தவும் சிறப்புக் குழுக்கள்இ அமைப்புகள் ஏற்படுத்தல்.
9. கல்விஇ வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மக்கள் தொகை பிரதிநிதித்துவ அடிப்படையில் முஸ்லிம்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் தனி இட ஒதுக்கீடு பெறுவதற்காகவும்இ உள்ளாட்சி அமைப்புகள்இ சட்டமன்றம்இ நாடாளுமன்றம் ஆகியவற்றில் முஸ்லிம்களின் மக்கள் தொகை பிரதிநிதித்துவ அடிப்படையில் தனித் தொகுதி முறையை பெற்றுத் தரவும் பாடுபடுவது.
10. சமூகக் கொடுமைகளுக்கு எதிராக - வரதட்சணைஇ வட்டிஇ சினிமாஇ ஆபாசம்இ அழகிப்போட்டிஇ போதைப்பொருட்கள்இ மதுஇ சூதாட்டம் போன்ற சமூகத் தீமைகளை ஒழிப்பதற்காக விழிப்புணர்வு பிரச்சாரங்கள்இ சுவரொட்டிகள் வெளியிடுதல்இ பிரச்சாரக் கூட்டங்கள்இ கருத்தரங்குகள்இ மாநாடுகள் நடத்துதல் மற்றும் தேவைக்கேற்ப ஜனநாயக ரீதியான இசட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்வது.
11. அடக்கு முறைகள்இ வரம்பு மீறல்கள்இ மனித உரிமை மீறல்கள்இ சட்ட மீறல்கள் இவற்றுக்கெதிராகவும் போராடுவது.
12. பாதிக்கப்பட்ட - அநீதி இழைக்கப்பட்ட எல்லா தரப்பு மக்களுக்கும் தேவையான அனைத்து வகையான உதவிகளையும் மேற்கொள்வது.
13. மதவெறிஇவன்முறை கலாச்சாரங்களை ஒழிப்பதற்குப் பாடுபடுவது.
14. இளைஞர்களை வன்முறையின் பக்கம் செல்வதை விட்டும் தடுப்பதற்கு அறவழிப்போராட்டத்திற்கான வழிமுறைகளையும்இ அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துச் சொல்லி அவர்களை சிறந்த நெறியாளர்களாக உருவாக்கப்பாடுபடுவது.
15. மத தீவிரவாதிகளிடமிருந்து இஸ்லாத்திற்கும்இ முஸ்லிம்களுக்கும் அச்சுறுத்தலோஇபாதிப்புகளோ ஏற்;பட்டால்; அவற்றை ஜனநாயக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் வலிமையாக எதிர்ப்பது.
16. அனைத்து மதஇ இனஇ மொழி மக்களும் சகோதரத்துவ உணர்வுடன் வாழ நல்லிணக்கத்தை ஏற்ப்படுத்திட தேவையான அனைத்து முயற்ச்சிகளையும் மேற்க்கொள்வது
copyright©2009 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJMP). All rights reserved. Site Designed and Developed by m.thameem ansari