முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Monday

தன்னைத் தானே காப்பாற்ற முடியாத பரிதாப அதிரை அவ்லியா!

PostHeaderIconதன்னைத் தானே காப்பாற்ற முடியாத பரிதாப அதிரை அவ்லியா!

 
அதிராம்பட்டிணத்தில் சமீப காலமாக அவ்லியாக்கள் அடங்கி இருப்பதாக சொல்லப்படும் இடங்கள்,மற்றும் அவ்லியாக்களின் நேசர்கள் என்று சொல்பவர்களுக்கு அடிமேல் அடி விழுந்து வருகிறது.

அவ்லியாக்களுக்கு காலம் காலமாக சந்தணம் பூசி வந்த ஒருவர், சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற கந்தூரி விழாவில் சந்தனம் பூச சென்ற போது முச்சு திணறி மரணம் அடைந்தார். அவ்லியா பக்தரை அந்த அவ்லியா காப்பாற்றவில்லை, கைவிட்டார்.காரணம் அவரால் அது முடியாது இந்த சம்பவம் கடல்கரைத் தெருவில் உள்ள தர்ஹாவில் நடைபெற்றது.

 

அதிரை உள்ள தர்ஹாவிற்கு அருகில் நெய்னா பிள்ளை அப்பா ஒலி என்பவருக்கு மினி தர்ஹா ஒன்று உள்ளது. கடந்த 17.08.2013 அன்று அந்த மினி தர்ஹாவின் கீற்று கொட்டகை தீப்பற்றி எரிந்தது. அவ்லியா கப்ரை உடைத்துக்கொண்டு தீயை அணைப்பார் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.தீ பற்றிய விஷயத்தை கூட அறிய முடியாத அவ்லியாவை காப்பாற்ற தீ அணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இறுதியாக, அவ்லியாவின் அடக்கஸ்தலமாக கருதப்படும் தர்ஹாவில் பற்றிய தீயை தீ அணைப்பு துறையினர் தான் அனைத்தனர் என்பது சோகமான செய்தி.

கேட்பவர்களுக்கு எல்லாம் கஷ்டத்தை போக்குவார் என்று நம்பப்படும் அவ்லியா, தனது கப்ர் தீ பற்றி எரியும் போது ஒன்றும் செய்ய முடியாமல் போனது அந்தோ பரிதாபம். நல்ல வேளை அவ்லியாவின் (?) கப்ர் கல்லால் கட்டப்பட்டு இருந்தது, ஒரு வேளை மரம் போன்ற எறியக்கூடிய பொருளில் அமைந்து இருந்தால், அந்த கப்ரும் சேர்ந்து எரிந்து போயிருக்கும்.

ஒரு வேலை கப்ர் வணக்கத்தை எதிர்ப்பவர்கள் தான் இந்த செயலை செய்தார்கள் என்று கப்ர் வணங்கிகள் கூறக்கூடும். அப்படி கூறினாலும், அவ்லியாவிற்கு எந்த சக்தியும் இல்லை என்பதை ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும். 

அவ்லியாக்கள் எனப்படுவர்களுக்கு எந்த விதமான சக்தியும் இல்லை என்பதை அல்லாஹ் தனது திருமறையில் கூறுவதை பாருங்கள்.

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைக் கவனமாகக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள். 

அல்குர்ஆன் (22:73)

பல தர்ஹாவில் உள்ள கப்ர்களில் உள்ள அடக்கஸ்தலத்தில் அவ்லியாவாக கருத்துப்படுவர் அடக்கம் செய்யப்படவில்லை என்றாலும், அவ்லியாக்கள் என்று நம்ப படுபவர் அங்கே அடங்கியிருந்தாலும் தனது கப்ரே தீ பற்றி எரியும் போது, அதை தடுக்கும் சக்தி அவருக்கு இல்லை என்பதற்கு இந்த நிகழ்ச்சி சான்று.

தமிழ் முஸ்லிம்களிடம் இருந்த தர்ஹா வழிபாடு என்ற கொடிய இணைவைப்பு காரியம் தழிழகத்தில் ஏற்பட்ட தவ்ஹீத் புரட்சியின் வாயிலாக பெருமளவில் துடைத்து எறிப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ். 

இன்ஷா அல்லாஹ், கூடிய விரைவில் மிச்சம் மீதி இருக்கும் இணைவைப்பு ஆலயங்கள் மக்களால் உடைத்து எறிப்படும்.

நன்றி 

ஆக்கம்: அதிரை TNTJ படம் உதவி: அதிரை நியூஸ்           

No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்