முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Tuesday

maraikayar pattinam welcomes you

மரைகாயர்பட்டினம் (Maraikayarpattinam) இது இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊர் ஆகும். 1950 வரை இவ்வூர்வாசிகள் கடல் வணிகம் செய்துவந்தனர். இலங்கையில் கொழும்பு,சிலாபம்,யாழ்ப்பாணம்,திரிகோணமலை,புத்தளம்,கல்முனை போன்ற துறைமுகங்கள் மற்றும் பர்மா-இன்றைய மியான்மரின் ரங்கூன்,வங்காளதேசதின் டாக்கா, போன்ற துறைமுகங்கள் இவர்களின் காலடிதடங்களையும் மரக்கலங்களையும் அதிகம் வரவேற்றவை.



இதுபோக பாரசீகம் என அழைக்ககப்பட்ட ஈரான், அதையடுத்த ஈராக்,குவைத், மேலும் எத்தியோப்பியா,எகிப்து,நாடுகளின் துறைமுக நகரங்களையும் அவ்வப்போது அடைந்து வணிகத்தில் ஈடுபட்டனர்.ஆஸ்திரேலியா கண்டுபிடிக்கப்ப்டாத காலத்திலேயே அங்கு காலடி பதித்தவர்கள் என்பது சுவையான செய்தியாகும். நியூசிலாந்து கடலில் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட "முகைதீன் வக்காஸ் கப்பல் மணி" என்ற பெயர் பொறிக்கப்பட்ட நங்கூர மணியே இதற்கு சான்றாகும். மரம்+கலம்+ராயர் - மரத்தால் செய்யப்பட்ட கலம்(கப்பல்) ன் உரிமையாளர் என்பதே மரக்கலராயர் என்பதாகும். இது மருவியே மரக்காயர் ஆனது. மரக்காயார்கள் மட்டுமே உள்ள ஊர் என்பதால் இப்பெயர் வந்திருக்கலாம்.
தகவல்
mohamed abdul raheem


மரைக்காயர் பட்டினம்
எம்.தமிம்

No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்