முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Tuesday

விபத்து

அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்

ராமநாதபுரம், மே. 6-


மதுரையில் இருந்து ராமேசுவரத்திற்கு நேற்று  காலை அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சை டிரைவர் கார்த்தீஸ்வரன் ஓட்டிச்சென்றார். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பகல் 11.45 மணிக்கு பஸ் சென்றது.

அப்போது ராமேசுவரத்தில் இருந்து பட்டுக்கோட்டைக்கு செல்லும் அரசு பஸ் அங்கு வந்தது. வேதாளை கிராமம் அருகே எதிர்பாராதவிதமாக இந்த இரு பஸ்களும் திடீரென நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பஸ்களின் முன் பகுதிகள் பலத்த சேதம் அடைந்தன..

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மண்டபம் முகாம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் மதுரை பஸ் டிரைவர் கார்த்தீஸ்வரன் இருக்கையில் அமர்ந்தபடியே உடல் நசுங்கி பலியானார். மேலும் பட்டுக்கோட்டை பஸ்சில் வந்த கணேசன் (வயது 50) மற்றும் வயதான பெண் ஒருவரும் பலியானார்கள். விபத்தில் 2 பஸ்களிலும் பயணம் செய்த 25-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர்.

அவர்களை போலீசார் மீட்டு ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக ராமேசுவரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சமுதாய பணிகளில் ஈடுபட்ட அணைத்து நல் உள்ளங்களிற்கும் நன்றி மற்றும் காவல் துறை மற்றும் அனைத்து மாணவர்களிற்கும் நன்றி,இதுபோல் இனிமேலும் ஆகாமல் இருக்க நம் மிக கவனத்துடனும் குரைந்த வேகத்துடனும் பேருந்தை இயக்க வேண்டும் என்று சொல்லி இறைவனிற்கு நன்றி சொல்லி விடைபெறுகிறேன் ....

அல்ல்ஹம்துளில்லாஹ் .....

இப்படிக்கு

M.தமிம்

மரைக்காயர் பட்டினம்

No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்