முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Tuesday

அப்துல்லாஹ் பெரியார்தாசன் மரணம்: சென்னை மருத்துவக்கல்லூரிக்கு உடல் தானம்


வாழ்க்கை குறிப்பு
இறந்த சகோ அப்துல்லாஹ் பெரியார்தாசனின் சொந்த ஊர் ஆற்காடு அடுத்த திரிமி கிராமம். 1949–ம் ஆண்டு வீராசாமி, சாரதா தம்பதிகளுக்கு மகனாக பிறந்த அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் சேஷா. பெரியார் மீது கொண்ட ஈர்ப்பால் தனது பெயரை பெரியார்தாசன் என்று மாற்றிக்கொண்டார்.
கடந்த 2010–ம் ஆண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறிய அவர், தனது பெயரை அப்துல்லா பெரியார்தாசன் என்று மாற்றிக்கொண்டார். பெரியார்தாசனின் மனைவி பெயர் வசந்தா (62), இவர்களுக்கு வளவன் (35), சுரதா (32), என 2 மகன்கள் உள்ளனர்.
பெரியார்தாசன் ம.தி.மு.க. உயர்நிலை குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்தார். 34 வருடங்களாக சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தத்துவ உளவியல் துறை பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார். அமெரிக்கா, தாய்லாந்து, மலேசியா, உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் கருத்தரங்கம் மற்றும் பட்டிமன்றங்களில் பங்குபெற்றார். 54 புத்தகங்களை எழுதியுள்ளார்.



சென்னை: பிரபல மனோதத்துவ நிபணரும் பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ்(பெரியார்தாசன்) உடல் நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியரக பணியாற்றி ஓய்வு பெற்ற டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார் தாசன்)அவர்கள் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப் பட்டு  சுயமரியாதை சுடராகவும், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்தார்.
அதன் பின்பு திருக்குர்ஆனை ஆய்வு செய்து அதன் பால் ஈர்க்கப் பட்டு கடந்த  2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இஸ்லாம் மதத்தை தழுவி அப்துல்லாஹ் என்று ஆனார்.
இந்நிலையில் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார் தாசன்) அவர்கள் உடல் நலிவுற்று சென்னை சோளிங்கநல்லூர் குளோபல் மருத்துவமனையில் கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மரணமடைந்தார்.
இஸ்லாத்தை தழுவுவதற்கு முன் பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் மின்னியவர். பெண் சிசுக் கொலைக்கு எதிரான திரைப்படமான 'கருத்தம்மா' திரைப்படத்தில் இவரின் சிறப்பான நடிப்பிற்காக தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத் தக்கது.

கண்–உடல் தானம்
பெரியார்தான் தான் உயிருடன் இருந்தபோதே தனது கண்களை தானம் செய்ய விருப்பம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அவரது கண்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தானமாக கொடுக்கப்பட்டன.
மேலும் சென்னை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் படிப்புக்காக தனது உடல் பயன்பட வேண்டும் என்று தனது குடும்பத்தினரிடம் அவர் கூறியிருந்ததை அடுத்து அவரது உடல் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை மருத்துவக்கல்லூரியில் ஒப்படைக்கப்படவிருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்