மண்டபம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்
கிளையின் சார்பாக 30-06-2013 அன்று தண்டையல் தெரு , தக்வா
பள்ளி அருகில் மாலை 07:00 மணி முதல் 09:00 மணி வரை மார்க்க
விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.அஜ்மல் அவர்கள் "முஸ்லிம்களின்
ஒற்றுமையும் , மறுமை வெற்றியும் " என்ற தலைப்பிலும் , மாவட்ட
பேச்சாளர் சகோ. அமீனுல்லாஹ் ., அவர்கள் "குழப்பமே இல்லாத
சத்தியம் மார்க்கம்" எனும் தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர் , மற்றும்
கிளை செயலாளர் சகோ I.ராஜா முகமது அவர்கல் நன்றியுரை
ஆற்றினர்.இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு
பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ் . . . . . .
வேதாளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேதாளை கிளை சார்பாக 30-6-2013 அன்று பேருந்து நிற்கும் இடத்தில் பொது மக்கள் மத்தியில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது , இதில் சகோ இஸ்மாயில் அவர்கள் "தூய்மையான இஸ்லாம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் , இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் . . . .
அல்ஹம்துலில்லாஹ் . . . . . .

No comments:
Post a Comment