காமெடி சம்பவம்
காமெடி சம்பவம் :D
வட சென்னை மாவட்டத்திலுள்ள
நேதாஜி நகர் சுன்னத் ஜமாத்
பள்ளிக்கு மிக அருகில்
வாரம்தோறும் ஞாயிற்றுக்
கிழைமை மஹ்ரிப் தொழுகைக்குப்
பிறகு பெண்கள் பயான்
நடைபெற்று வருகின்றது.
அல்ஹம்துலில்லாஹ்.
இதை பொருத்துக்கொள்ளாத சுன்னத் (?)
ஜமாத்தினர் முதலில் ஒரு குழுவினர்
சென்னை கமிஷனர் அலுவலகத்திற்குச்
சென்று புகார் செய்தனர்.
அது பலனளிக்கவில்லை என்ற உடன்
வாரந்தோறும் நமக்குப் போட்டியாக
அதே நேரத்தில் சுன்னத் ஜமாஅத்
உலமாக்களை (?) வர வழைத்து பயான்
நடத்துகின்றார்கள்.
17/2/13 அன்று வழிகெட்ட
பரலேவிகளின் தலைவராக இருக்கக்
கூடிய சேக் அப்துல்லாஹ்
ஜமாலியை அழைத்து வந்து கேள்வி-
பதில் நிகழ்ச்சி நடத்தினார்கள்.
அந்த
நிகழ்ச்சியில்
ஒரு சகோதரர்
“தொழுகையில்
தொப்பி அணிவது சுன்னத் எனக்
கூறி தொப்பி இல்லை என்றால்
பிளாஸ்ட்டிக் தொப்பி வைத்து தொழ
வரும் அனைவரையும் தொப்பி போட
சொல்லும் நீங்கள், தாடி வைப்பதும்
சுன்னத்தாக இருப்பதால், பிளாஸ்ட்டிக்
தொப்பிபோல பிலாஸ்ட்டிக்
தாடிவைக்கவும் கட்டாயப்
படுத்தலாமே” எனக் கேட்ட
போது சிரிப்பொலி ஜமாலியின்
காதை கிழித்தது.
இதற்கு பதில்
சொல்ல வழியில்லாமல் சில மழுப்பலான
பதில்களை வாந்தி எடுத்தார் ஜமாலி.
கேள்விகளின் உக்கிரத்தை உணர்ந்த
ஜமாலி உடனடியாக”
நிகழ்ச்சி முடிந்துவிட்டது” என
ஓட்டம் எடுத்தார்.
மேலும் தன்னை இந்த
நிகழ்ச்சிக்கு அழைத்த பள்ளிவாசல்
நிர்வாகிகளையும் வறுத்தெடுத்தார்
. ஏன் இப்படிப்பட்ட
நிகழ்சிக்கு என்னை அழைத்தீர்கள்;
பயானுக்கு வந்தவர்களில் பாதிப்பேர்
தலையில் தொப்பி இல்லை. நஜாத்
காரர்கள் கலந்து கொள்ளும் இந்த
நிகழ்ச்சிக்கு என்னை ஏன் அழைத்தீர்கள்? என
கொட்டி தீர்த்துவிட்டு சென்றார்.
இதன்பிறகு இவர்கள் தொடர்ந்து நடத்தும்
பயான்களில் கேள்வி-பதில்
பகுதியையே தூக்கிவிட்டனர்.
தகவல்: உணர்வு வார இதழ்
பட உதவி யூசுப் ரியாஸ்
No comments:
Post a Comment