முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Saturday

TNTJ புதுமடம் கிளை - நபி வழி திருமணம்!

PostHeaderIcon TNTJ புதுமடம் கிளை - நபி வழி திருமணம்! 

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கிளையில் நபிவழித் திருமணம் 16/08/2013 (நேற்று)  ஜும்மா தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.

 

இத்திருமணம் புதுமடத்தில் இதுவரை நடை பெறாத அளவில் மிகவும் எளிமையாகவும் ,மற்ற திருமணத்தில் நடக்கும் அலங்காரம் , வீண்விரையம் , குதிரை சவாரி, ஊர்வலம் ..

போன்ற அனாச்சாரங்கள் இல்லாமல் நடைபெற்றது. (புகழனைத்தும் அல்லாஹுவுக்கே....!) 

 

இதில் சகோ: அமினுல்லாஹ் (TNTJ மாவட்ட தாயி) அவர்கள் நபிவழித் திருமணம் பற்றிய தெளிவான குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் உரையாற்றினார்கள். பின்னர் பொதுவான இரண்டு சாட்சியங்களுடனும் மணமகன் மற்றும் மணமகள் ஒப்புதலுடனும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. மணமகன் மஹராக 4 பவுன் தங்க கொலுசை மணமகளுக்கு கொடுத்தார். இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் மற்ற திருமணங்களில் நடக்கும் இறைதூதர் (ஸல்) காட்டி தராத துஆக்களை புறக்கணித்து. . .

  

நபி (ஸல் ) காட்டி தந்த (பாரகல்லாஹு லக்க) துஆவை ஒவ்வொருவரும் மணமக்களுக்காக பிராத்தித்தார்கள். இறுதியாக ஒவ்வொருவரும் சபையை விட்டு கலைந்து செல்லும் துஆ ஓதியவர்களாக கலைந்து சென்று மணமகன் இல்லத்தில் வலிமா விருந்து வழங்கப்பட்டு வீண்விரையம் தவிர்க்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்!
 

 


No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்