முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Wednesday

R.புதுப்பட்டினம்


$$தவ்ஹீத் ஜமாஅத் பிரச்சாரத்தை ஊருக்குள் வரவே விட மாட்டோம் என்று கங்கனம் கட்டிகொண்டு திரிந்த R.புதுப்பட்டினம் சுன்னத் ஜமாஅத், அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் "தவ்ஹீத் ஜமாஅத் பிரச்சாரத்தை நாங்கள் தடுக்க மாட்டோம்" என்று எழுத்துப் பூர்வமாக எழுதிக்கொடுத்து மண்ணைக் கவ்விய காட்சி!$$

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்.புதுப்பட்டினம் கிளையில் செய்யப்படும் எந்த ஒரு ஏகத்துவ பிரச்சாரத்திற்கும் ஆர்.புதுப்பட்டினம் சுன்னத் ஜமாத்தினர் முட்டுக் கட்டை செய்பவர்களாகவே இருந்து வந்தனர்.

அல்லாஹ்வின் மாபெரும் அருளால் கடந்த 04.06.2013 செவ்வாய் கிழமை இரவு 10 மணியளவில் ஆவுடையார் கோவில் தாசில்தார் அவர்களின் முன்னிலையில் ஆர்புதுப்பட்டினத்தில் தவ்ஹீத் ஜமாத்தினரால் செய்யப்படும் எந்த ஒரு ஏகத்துவ பிரச்சாரத்திற்கும் இனி நாங்கள் முட்டுக்கட்டை போட மாட்டோம் தொந்தரவு செய்யமாட்டோம் என்று எழுதிக் கொடுத்தனர் அல்ஹம்துலில்லாஹ்.

"தவ்ஹீத் ஜமாஅத்த ஊருக்குள்ள வர விட்டுடுவோமா?" என்று வாய்ச்சவடால் விட்டு திரிந்தவர்களுக்கு இவ்வுலகில் அல்லாஹ் படு கேவலத்தை கொடுத்துள்ளான்!

அதுமட்டுமல்ல அவர்கள் எழுதிக்கொடுத்த தகவலில்
////"இறைவனடி சேரும் இஸ்லாமியர்களின் உடல் அடக்கம் செய்வதும் எங்கள் கிராமத்தில் எவ்வித பாகுபாடும் இல்லாமல் அடக்கம் செய்யப்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களிலும் எங்கள் கிராமத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்வதில் எதிர்ப்போ மறுப்போ காட்ட மாட்டோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்."////

என்ற விஷயத்தையும் எழுத்துப்பூர்வமாக கொடுத்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.


ஊரில் வாழும் எத்தனையோ குடும்பங்கள் இந்த விஷயத்திற்கு பயந்துதான் தன்னை தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவாளர்/உறுப்பினர் என்பதை வெளிப்படையாக காட்டாமல் மறைத்தபடி உள்ளனர். இனிவரும் காலங்களில் இந்த நிலை இருக்காது என்று நினைக்கிறோம்.


அதுமட்டுமல்ல, அவர்கள் எழுதிக்கொடுத்த அந்த மடலில்
////***சுன்னத் ஜமாஅத் முறைப்படி*** திருமணம் செய்யும் பட்சத்தில் திருமணப் புத்தகத்தில் பதிவு செய்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம்.//// என்ற தங்களது வரட்டுக் கவுரவத்தை விட்டுவிடக்கூடாது என்ற பிடிவாதப் போக்கின் அடையாளமும் தெரிந்த்தது.

உங்களது சுன்னத் (?) ஜமாஅத் முறையே சுன்னத்திற்கு மாற்றமானது என்ற காரணத்திற்காகத்தான் தனியாக தவ்ஹீத் ஜமாஅத்தில் பதிவு செய்து திருமணம் செய்கின்றார்கள். எனவே இது போன்ற வரட்டு வாதத்தை விட்டுவிட்டு நபிவழியில் மாலை இல்லாமல், குதிரை, கொட்டு மேளங்கள் என்று பிடிக்க விடாமல், இசை பாடல்கள் ஒலிக்க விடாமல், முனியையா கோவிலில் மரியாதைக்காக மாப்பிள்ளையை இறங்க விடாமல் சுருக்கமாக சொல்லப்போனால் நபிவழியில் எளிமையாக திருமணம் செய்து வையுங்கள். அதுதான் சுன்னத்! அதை செய்வோர்தான் சுன்னத் ஜமாத்!!

இனியாவது இது போன்று அவமானப்படாமல் முழுக்க முழுக்க குர் ஆன் ஹதீஸிற்கு உட்பட்டு உங்களது செயல்களை அமைத்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் ஈருலகிலும் வெற்றி பெறலாம்.

No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்