அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்
ராமநாதபுரம், மே. 6-
மதுரையில் இருந்து ராமேசுவரத்திற்கு இன்று காலை அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சை டிரைவர் கார்த்தீஸ்வரன் ஓட்டிச்சென்றார். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பகல் 11.45 மணிக்கு பஸ் சென்றது.
அப்போது ராமேசுவரத்தில் இருந்து பட்டுக்கோட்டைக்கு செல்லும் அரசு பஸ் அங்கு வந்தது. வேதாளை கிராமம் அருகே எதிர்பாராதவிதமாக இந்த இரு பஸ்களும் திடீரென நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பஸ்களின் முன் பகுதிகள் பலத்த சேதம் அடைந்தன.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மண்டபம் முகாம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் மதுரை பஸ் டிரைவர் கார்த்தீஸ்வரன் இருக்கையில் அமர்ந்தபடியே உடல் நசுங்கி பலியானார். மேலும் பட்டுக்கோட்டை பஸ்சில் வந்த கணேசன் (வயது 50) மற்றும் வயதான பெண் ஒருவரும் பலியானார்கள். விபத்தில் 2 பஸ்களிலும் பயணம் செய்த 25-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர்.
அவர்களை போலீசார் மீட்டு ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக ராமேசுவரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

No comments:
Post a Comment